ஜன.31 கடைசி தேதி.. தமிழக இளைஞர்களுக்கு ₹5,000 ஊக்கத்தொகையுடன் பயிற்சி - எங்கு, எப்படி விண்ணப்பிப்பது?
தாட்கோ நிறுவனம், 'அப்பல்லோ மெட்ஸ்கில்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து, தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில்மருத்துவமனை நிர்வாகப் பயிற்சியை வழங்குகிறது. இந்தப் பயிற்சியின் சிறப்பம்சமே, பயிற்சி காலத்திலேயே மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதுதான்.
இந்தப் பயிற்சி மொத்தம் 6 வாரங்கள் நடைபெறும். முதல் 2 வாரங்கள் இணைய வழி கற்றல் (Online Learning). அடுத்த 4 வாரங்கள் அப்பல்லோ அல்லது அதன் தொடர்புடைய மருத்துவமனைகளில் நேரடி வேலைவாய்ப்புப் பயிற்சி. பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு ரூ. 5,000/- ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்தப் பயிற்சிக்கான முழுச் செலவையும் தாட்கோ நிறுவனமே ஏற்றுக் கொள்ளும்.

பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு அப்பல்லோ மருத்துவமனை மற்றும் முன்னணி மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மட்டுமே இந்த பயிற்ச்சிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
2022 முதல் 2025 வரை நர்சிங் (Nursing) பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை அறிவியல் பட்டம் பெற்றவர்கள் அல்லது தற்போது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 20 முதல் 25 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதித் தேர்வு: அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நடத்தும் இணைய வழி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே இந்தப் பயிற்சி அளிக்கப்படும்.
தகுதியுள்ள மாணவர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். இத்துடன் முழுநேர Ph.D பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான ரூ. 1 லட்சம் கல்வி ஊக்கத்தொகைத் திட்டத்திற்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதளம்: https://adwphdscholarship.in/. கடைசி நாள்: 31.01.2026 மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழக அரசின் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, செவிலியர் துறையில் உள்ள மாணவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
