தாய் மீது திடீரென பாய்ந்த சிறுத்தை... வெறும் கைகளால் அடித்துக் கொன்ற இளைஞர்!
தாய் மீது திடீரென சிறுத்தை பாய்ந்த நிலையில், தனது தாயைப் பாதுகாக்க உயிரைப் பணையம் வைத்துப் போராடிய இளைஞர், வெறும் கைகளாலேயே சிறுத்தையை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தாயைக் காப்பாற்றிய இளைஞரின் துணிச்சலை ஊரே வியந்து பேசுகிறது.
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள மொரதா பகுதியில், 24 வயதான சத்யபிரதா பூர்த்தி தனது பண்ணை வீட்டில் இருந்தபோது, திடீரென வேலியைத் தாண்டி ஒரு சிறுத்தை குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது. முதலில் அங்கிருந்த வளர்ப்பு நாயைத் தாக்கிய அந்தச் சிறுத்தை, சத்தம் கேட்டு ஓடி வந்த பூர்த்தியின் தாயார் மீதும் பாய முயன்றது.

தனது தாயைக் காக்க எண்ணிய பூர்த்தி, எவ்வித ஆயுதமும் இன்றி நேரடியாகச் சிறுத்தையுடன் மோதினார். சிறுத்தைக்கும் பூர்த்திக்கும் இடையே நடந்த இந்த உக்கிரமான போராட்டத்தில், சிறுத்தையின் நகங்கள் பாய்ந்து பூர்த்தியின் மார்பு மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இருப்பினும் விடாமல் தாக்கியதில், அந்தச் சிறுத்தை உயிரிழந்தது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
