குடியிருப்பு பகுதிகளில் மக்னா யானை அட்டகாசம்!! பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் !!

 
மக்னா யானை

நீலகிரி மாவட்டம் கூடலூர்- முதுமலை எல்லையோரம் தொரப்பள்ளி, புத்தூர் வயல், ஸ்ரீ மதுரை உள்பட ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை ஒட்டிய பகுதியில் கடந்த சில மாதங்களாக மக்னா யானை ஒன்று சுற்றி வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேவந்த மக்னா யானை, கூடலூர் சுற்றுவட்டார கிராமங்களுக்குள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. 

இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அந்த யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

மக்னா யானை

இதைத்தொடர்ந்து அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு மக்னா யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் இறங்கினர். இதற்காக முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கணேசன், சீனிவாசன் என 2 கும்கி யானைகள் கூடலூர் தொரப்பள்ளிக்கு நேற்று அழைத்து வரப்பட்டன. தொடர்ந்து மாக்கமூலா பகுதியில் மக்னா யானை நிற்பதாக கிடைத்த தகவலின் பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

மக்னா யானை

எனினும் தொரப்பள்ளி பகுதியில் உள்ள மூங்கில் காடுகளில் மக்னா யானை உள்ளதாக கூறப்படுகிறது. மிகவும் அடர்த்தியான அப்பகுதிக்கு கும்கி யானைகளுடன் செல்வது மிகவும் சவாலானது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் யானையின் நடமாட்டத்தை ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர். காட்டு யானை ஊருக்குள் வந்தால் கும்கி யானைகள் மூலம் விரட்டியடிப்பதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

 
 

From around the web