நடிகர் ரஜினி வீட்டின் வேலைக்கார பெண்மணி கைது! நகைகளை திருடியது அம்பலம்!

 
ஐஸ்வர்யா ரஜினி

நடிகர் ரஜினியின் வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி (40) என்ற பெண்மணியை நகைகளைத் திருடியதாக போலீசார் கைது செய்துள்ளனர்.  ஐஸ்வர்யா ரஜினியின் வீட்டில் வேலைச் செய்து வந்தவர்கள் மீது, நகைத் திருட்டு தொடர்பாக சந்தேகத்தை தெரிவித்திருந்த ஐஸ்வர்யா, காணாமல் போன நகைகள் குறித்த தகவல்களையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஈஸ்வரியின் வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு செய்த போது, சமீபத்திய பரிவர்த்தனைகளில் வைத்து விசாரித்த போது, அவர் நகைகளை திருடியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  இந்த விவகாரம் குறித்து ஈஸ்வரியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினியின் வீட்டில் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கில்  மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நடிகை ஐஸ்வர்யா புகாரித்துள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இயக்குநர் ஐஸ்வர்யா, ரஜினியின் கெளரவ நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்பட பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, நடைப்பெற்று வருகிறது. இரவு பகலாக இந்த படத்தின் பணிகளில் ஐஸ்வர்யா இயங்கி வருகிறார். கடந்த ஆண்டு கணவர் தனுஷ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக  தனுஷை விட்டு பிரிந்து வாழும் ஐஸ்வர்யா, தனது மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் தனியாக தேனாம்பேட்டையில் தனது வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தன் இல்லத்தில் லாக்கரில் வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். 
ஐஸ்வர்யா

இது குறித்து அவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஐஸ்வர்யாவின் புகார் மனுவில், வைர செட்கள், கோயில் நகைகளில் உள்ள வெட்டப்படாத வைரங்கள், பழங்கால தங்கத் துண்டுகள், நவரத்தினம் செட்கள், தங்கத்துடன் கூடிய முழு பழங்கால வெட்டப்படாத வைரம், இரண்டு கழுத்து துண்டுகள் பொருந்திய காதணிகள், ஆரம் நெக்லஸ் மற்றும் சுமார் 60 சவரன் எடைகள் கொண்ட வளையல்கள் போன்றவை காணாமல் போயிருப்பதாக ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். 

ஏப்ரல் 9, 2022 அன்று, தனது லாக்கர் நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு மாற்றப்பட்டது. லாக்கரின் சாவிகள் செயின்ட் மேரிஸ் சாலை குடியிருப்பில் உள்ள எனது தனிப்பட்ட இரும்பு அலமாரியில் வைக்கப்பட்டிருந்தன. 2019ஆம் ஆண்டு தனது தங்கை சௌந்தர்யாவின் திருமணத்திற்கு இந்த நகைகளைப் பயன்படுத்திய பின்னர் தனது லாக்கரில் அவற்றை பத்திரமாக வைத்திருந்ததாக கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா

இறுதியாக 2022 ஏப்ரல் 9ம் தேதி அன்று நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் லாக்கர் மாற்றப்பட்டது. லாக்கரின் சாவிகள் செயின்ட் மேரிஸ் சாலை குடியிருப்பில் உள்ள எனது தனிப்பட்ட இரும்பு அலமாரியில் வைக்கப்பட்டிருந்தன. இது எனது வீட்டில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் தெரியும். அவர்களும் அடிக்கடி அப்பார்ட்மெண்டுக்கு செல்வார்கள் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 10ம் தேதியன்று நகைகளை சரி பார்த்த போது திருமணமான 18 ஆண்டுகளில் சேர்க்கப்பட்டிருந்த நகைகளில் மேற்கூறிய நகைகள் இல்லை என்பது தெரிய வந்தது என அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், வீட்டில் வேலைப் பார்க்கும் ஊழியர்கள் அனைவருக்கும் தெரியும் என்றும், வேறு வெளியாட்கள் யாரும் நுழையவில்லை என்றும் தனது சந்தேகத்தை தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினியின் வீட்டில் வேலைப் பார்த்து வந்த ஈஸ்வரி என்ற பெண்மணியை, நகைகளைத் திருடியதாக போலீசார் கைது செய்துள்ளனர். ஈஸ்வரியின் வங்கி கணக்கில் சமீபத்திய பண பரிவர்த்தனைகளின் மூலமாக நகைகளை ஈஸ்வரி திருடியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web