சிஎஸ்கே தோல்விக்கு முக்கிய காரணம்... ருதுராஜ் செஞ்ச மிகப் பெரிய தவறு!

இந்த நாளுக்காக பல வருடங்களாக காத்திருந்தார்கள் பெங்களூரு அணியினர். எத்தனை வருடங்களுக்குப் பின்னர் அவர்களுக்கு சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக வெற்றி கிடைத்திருக்கிறது தெரியுமா? இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இரண்டு முக்கிய அணிகளான பெங்களூரும், சிஎஸ்கேவும் நேற்று மோதியது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை தோற்கடித்தது. சிஎஸ்கே அணியின் இந்த தோல்விக்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளர் செய்த ஒரு தவறு முக்கியமாக அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் மோதிய கடைசி போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றிருந்தது. அந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே கேப்டன் ருதுராஜ் எல்லா முடிவுகளையும் எடுப்பதாகவும், தான் களத்தில் ஃபில்டர்கள் சரியான கோணத்தில் இருப்பதை மட்டுமே பார்ப்பதாகவும், முக்கிய முடிவுகளில் தான் தலையிடுவது இல்லை எனவும் சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனி மிகத் தெளிவாக கூறியிருந்தார். இதன் மூலம் ருதுராஜ் சுதந்திரமாக முடிவுகள் எடுக்கிறார் என்பது தெளிவானது.
இந்நிலையில் இந்த போட்டிக்கு காயத்தில் இருந்த பதிரனா விளையாடுவதற்கு வாய்ப்பில்லை எனவும், எனவே அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்க வேண்டாம் எனவும் போட்டிக்கு முன்பாக சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று பதிரனா திடீரென விளையாடியது அணிக்கு பெரிய பின்னடைவை உருவாக்கியது.
அதே போன்று நேற்று வேகப்பந்துவீச்சாளர் நாதன் எல்லீஸ் இடத்தில் பதிரனா இடம் பெற்றார். நாதன் எல்லீஸ் பவர் பிளேவில் குறைந்தது இரண்டு ஓவர்கள் பந்து வீசும் நிலையில் இருக்கக்கூடியவர். ஆனால் பதிரனா மிடில் மற்றும் டெத் ஓவர்களில் மட்டுமே பந்து வீசக் கூடியவர். இந்நிலையில் நேற்றைய போட்டியில் கலில் அகமது மட்டுமே பவர் பிளே வேகப் பந்து வீச்சாளராக சிஎஸ்கே அணியில் இருந்தார். சாம் கரன் சப்போர்ட் பவுலர் ஆக மட்டுமே இருக்க முடிந்தவர்.
ஆடுகளம் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. நல்ல பவுன்ஸ் இருந்ததை கலில் அகமது சிறப்பாக பயன்படுத்தினார். ஆனால் அவருடன் இணைந்து இதை பயன்படுத்திக் கொள்வதற்கு இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லீஸ் அணியில் இல்லை. துருப்புச்சீட்டான நூர் அகமதுவின் ஒரு ஓவரும் பவர் பிளேவில் வீச வேண்டியதாக அமைந்தது. பதிரனாவை கொண்டு வந்த முடிவதால் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இரண்டாவது காரணமாக ரஜத் பட்டிதாருக்கு தீபக் ஹூடா கேட்ச் விட்டது அமைந்தது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!