பனியன் நிறுவன மேலாளர் துண்டு துண்டாக வெட்டி சாக்கில் கட்டி அட்டைப்பெட்டிக்குள் வைத்து குளத்தில் வீசப்பட்ட கொடூரம்...!

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம், அவிநாசி கருவலூர் காளிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் சடையப்பன் மகன் கோவிந்தசாமி. 54 வயதாகும் இவர் பனியன் நிறுவனம் மேலாளராக இருந்து வருகிறார். இவருக்கும் இவரது உறவினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், பிப்ரவரி 19ம் தேதி புதன்கிழமை முதல் கோவிந்தசாமியை காணவில்லை என அவரது குடும்பத்தினர் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீஸார், பல்வேறு இடங்களில் கோவிந்தசாமியைத் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் பெருமாநல்லூர் அருகே தொரவலூர் குளத்தில் வெள்ளைச் சாக்கு கட்டிய அட்டைப்பெட்டி மிதப்பதாக இன்று காலை போலீஸாருக்கு கிடைத்தது. இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் சொத்து தகராறில் துண்டு துண்டாக வெட்டி தொரவலூர் குளத்தில் வீசப்பட்ட பனியன் நிறுவன மேலாளர் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
இதைத் தொடா்ந்து தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அட்டைப்பெட்டியை குளத்திலிருந்து போலீஸாா் மீட்டனா். அதில் காணாமல் போன கோவிந்தசாமி உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அட்டைப்பெட்டியில் வைத்து குளத்தில் தூக்கி வீசியிருப்பது தெரிய வந்தது. அவரது உடலின் மீதி பாகங்களை போலீஸார் தேடி வருகின்றனர்.இச்சம்பவம் பெருமாநல்லூர் அவிநாசி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. பனியன் நிறுவன மேலாளரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசியது யாா் என்பது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!