நாளை திருச்செந்தூரில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்... மார்ச் 2ல் தேரோட்டம்!

 
திருச்செந்தூர் கந்தசஷ்டி

நாளை பிப்.21ம் தேதி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், இந்த ஆண்டிற்கான மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

நாளை 21ம் தேதி அதிகாலை 1 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, காலை 5:00 மணி முதல் 5:30 மணிக்குள் கோவில் செப்பு கொடிமரத்தில் மாசித் திருவிழா கொடியேற்றம் நடைபெறும். பின்னர் கொடி மரத்திற்குப் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டு, மற்ற கால பூஜைகள் தொடரும்.

திருச்செந்தூர் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு விழா... நாள் நேரம் அறிவிப்பு!

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 5-ஆம் திருநாள், வரும் 25-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று இரவு 7:30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில் வைத்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் குடவருவாயில் தீபாராதனை நடைபெறும். இதனைத் தொடர்ந்து 7-ஆம் திருநாளான 27-ஆம் தேதி, அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருள்வார். அன்று மாலை 4:30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்கச் சப்பரத்தில் 'சிவப்பு சாத்தி' கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார்.

விழாவின் 8-ஆம் திருநாள் அதிகாலை, சுவாமி சண்முகர் வெள்ளிச் சப்பரத்தில் 'வெள்ளை சாத்தி' கோலத்தில் வீதி உலா வருவார். அதனைத் தொடர்ந்து, அன்று பகல் 10:30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் 'பச்சை சாத்தி' கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

திருச்செந்தூர் முருகன் முருகர்

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ஆம் திருநாள் தேரோட்டம், மார்ச் 2ம் தேதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. அன்று காலை 7 மணிக்கு விநாயகர், மி மற்றும் அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளிவீதி நான்கு ரத வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்கள். 11-ஆம் திருநாளான மார்ச் 3-ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு மேல் சுவாமியும் அம்பாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றி வரும் தெப்ப உற்சவம் நடைபெறும். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!