மெகா பிளான் தயார்... 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்': முதல்வர் ஸ்டாலின் இன்று அதிரடி ஆய்வு!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது கனவுத் திட்டமான 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
கடந்த ஜனவரி 9ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டம், வெறும் 3 நாட்களில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. திட்டம் தொடங்கப்பட்ட முதல் 48 மணி நேரத்திலேயே லட்சக்கணக்கான குடும்பங்கள் தங்களது எதிர்காலக் கனவுகளையும், கோரிக்கைகளையும் தன்னார்வலர்கள் மூலம் பதிவு செய்துள்ளனர். இது குறித்த புள்ளிவிவரங்களை முதல்வர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

50,000 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் வீடு வீடாகச் சென்று தரவுகளைச் சேகரிக்கும் பணியில் எந்தவிதத் தொய்வும் இருக்கக்கூடாது என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதுவரை வழங்கப்பட்ட 'கனவு அட்டைகள்' மற்றும் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்ட தரவுகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முதல்வர் உத்தரவிட்டார்.
பெறப்படும் கோரிக்கைகளில் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் (குடிநீர், சாலை, மின்சாரம்) குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
"மக்களின் கனவுகளே எனது கனவு" என்று பொன்னேரி மாநாட்டில் முழங்கிய முதல்வர், இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்படும் தரவுகளைக் கொண்டே 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை (Manifesto) தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார். இது வெறும் அரசியல் நடவடிக்கை மட்டுமல்லாது, 2030-க்குள் தமிழகத்தைப் பொருளாதார ரீதியாக முதன்மை மாநிலமாக மாற்றும் தொலைநோக்குத் திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
