மோடி அரசு தமிழகத்திற்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது... செல்வப்பெருந்தகை கண்டனம்!

தமிழக அரசுக்கு எதிராக மத்திய அரசு விரோத போக்கை மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 46 சுங்கச் சாவடிகளில் ஏற்கனவே உயர்த்தப்பட்டன. தற்போது இந்த கட்டணத்திற்கு கூடுதலாக 5 முதல் 10 சதவிகிதம் வரை உயர்த்தி வசூலிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க ஒவ்வொரு முறையும் ரூ 23 வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தர மறுப்பு, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுப்பு
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாராக் கடனாக ரூ16 லட்சம் கோடி தள்ளுபடி, 100 நாள் வேலை திட்டத்திற்கு தர வேண்டிய ரூ 4034 கோடியை தர மறுத்து ஒன்றிய அரசு அத்திட்டத்தை முடக்குவது, கடந்த 5 மாதங்களாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை என பல்வேறு நிலைகளில் தமிழக நலன்களுக்கு விரோதமாக மோடி அரசு செயல்படும் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது என கடுமையாக விமர்சித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!