உங்களிடம் கொள்ளையடித்த பணத்தை தேர்தலில் வண்டி வண்டியாக கொட்டுவார்கள்... விஜய் பேச்சு!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா தவெக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 18 மாவட்டங்களை சேர்ந்த 88 தொகுதி மாணவர்கள் கலந்து கொண்டனர். இன்று நடைபெற்று வரும் இந்த விழாவில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களை தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

கல்வி விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் தேர்தலின்போது யாரும் காசு வாங்கி ஓட்டு போட வேண்டாம். உங்களிடம் கொள்ளையடித்த பணத்தை தேர்தலின்போது வண்டி வண்டியாக கொட்டுவார்கள்.

ஓட்டுக்கு பணத்தை கொட்டும்போது நீங்கள் என்ன செய்வீர்கள் என்றும் எனக்கு தெரியும். ஜனநாயக கடமையை சரியாக செய்வது என்பது பெரிய விஷயமல்ல, சாதாரண விஷயம்தான். நல்லவர்கள், நம்பிக்கையானவர்கள், இதுவரை ஊழலே செய்யாதவர்கள் யாரென பார்த்து தேர்ந்தெடுக்கும்படி பெற்றோரிடம் சொல்லுங்கள் என கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
