பணம் பத்தல... ரூ.1.8 கோடி சம்பளம் போதாமல் கதறும் இளைஞர்!

இந்தியாவில் கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று ஆஸ்வோரா ஜெயின். தன்னுடைய உயர் சம்பளத்தையும் மிஞ்சும் செலவுகளையும் பற்றி லிங்க்ட்இன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவருடைய சம்பளம் ஆண்டுக்கு ரூ.1.8 கோடி சம்பளம். வரி பிடித்தபின் அவரிடம் கிடைக்கும் தொகை ரூ.1 கோடியாகவே இருப்பதாகவும், அதாவது மாதம் சுமார் ரூ8.3 லட்சம் தான் கைக்கு வந்து சேரும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவரின் செலவுகள் மிகவும் ஆடம்பரமாக இருக்கின்றன. மாதம் ₹1.5 லட்சம் வீட்டு வாடகைக்கு செலுத்த, ரூ80,000 கார் ஈஎம்ஐக்கு செலுத்தி விடுகிறார். மேலும், ஃபுட் டெலிவரி செயலிகள், ஹோட்டல் உணவுகள், பிரீமியம் வகை உடைகள் மற்றும் வைன்கள், ஜிம் சந்தா உள்ளிட்டவற்றுக்கு மட்டும் மாதத்திற்கு ரூ8.87 லட்சம் செலவு செய்வதாகவும், தன்னுடைய சம்பளத்தை விட ரூ57,000 அதிகம் செலவழிக்க நேரிடுகிறது என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலர் இவரது வாழ்க்கை முறைதான் அதிக செலவுக்கு காரணம் என கூறி கருத்து பதிவு செய்துள்ளனர். “இந்த நகரம் உங்களை இவ்வளவு செலவழிக்கச் சொன்னதில்லை, நீங்கள் தான் அந்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்” என விமர்சித்துள்ளார்.
மற்றொருவர் “30,000 சம்பளத்தில் கூட சந்தோஷமாக வாழும் மக்கள் பெங்களூருவில் இருக்கிறார்கள்” என பகிர்ந்துள்ளார். உயர்ந்த சம்பளமிருந்தும், செலவுப் பழக்க வழக்கத்தால் சேமிப்பு இல்லாத நிலை இப்போது பலருக்கும் சிந்திக்க வைத்திருக்கும் வகையில் அமைந்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!