தமிழகத்தில் பருவமழை விடைபெற்றது... ஜன.23 முதல் மழைக்கு வாய்ப்பு... உறைபனி எச்சரிக்கை!
தென்மாநிலங்களில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, நேற்றுடன் (ஜனவரி 19, 2026) முழுமையாக விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அதிகாலை வேளைகளில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜனவரி 23 முதல் 25 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

நீலகிரி மற்றும் திண்டுக்கல் (கொடைக்கானல்) மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் உறைபனி (Frost) ஏற்பட வாய்ப்புள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
