பகீர் சிசிடிவி காட்சி!! நிவாரணம் கிடைக்கும் என நம்பி பேருந்து முன் பாய்ந்த தாய்!!

 
பாப்பாத்தி

சேலம் கலெக்டர் அலுவலகம் பின்பகுதியில் உள்ள மறைமலை அடிகள் தெருவில் வசித்து வருபவர்  46 வயது பாப்பாத்தி. இவர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.  கணவரை இழந்த இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.  ஜூலை 28ம் தேதி காலை, 2வது அக்ரஹாரம் பகுதியில், தனியார் பேருந்து மோதியதில் பாப்பாத்தி உயிரிழந்தார்.


இந்த விபத்து குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிடி கேமராவை ஆய்வு செய்த போது, சம்பவம் நடப்பதற்கு முன்னதாக, டவுன் பகுதியில் இருந்து சென்ற பேருந்தில் விழுவதற்காக பாப்பாத்தி ஓடி சென்று உள்ளார். திடீரென குறுக்கே வந்த டூவீலர் அவர் மீது மோதியதில் பாப்பாத்தி கீழே விழுந்ததும், அதன் பிறகு 2வதாக வந்த  பேருந்தின்  முன்பு ஓடிச்சென்று, விழும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அவர் திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடனே, ஓடி பேருந்து முன்பு பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் உருக்கமான தகவல் வெளியானது. மகள் கல்லூரி படிப்பை முடித்த நிலையில், மகன் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார்.

விபத்து


அவரது மகனுக்கு கல்லூரி கட்டணம் ரூ.45000 செலுத்தும்படி கல்லூரி நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால், அந்த பணத்தை அவரால் கட்ட முடியவில்லை. இதற்காக அக்கம்பக்கம் இருந்தவர்களிடம் கடன் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு யாரும் பணம் கொடுத்து உதவவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் அவர் காணப்பட்டு உள்ளார்.அப்போது யாரோ சிலர் தூய்மை பணியாளராக பணிபுரிவதால் விபத்தில் உயிரிழந்தால் மரணத்தின் மூலம் அரசு நிவாரண தொகை கிடைக்கும், மகன் படிப்புக்கு உதவி கிடைக்கும் அல்லது கருணை அடிப்படையில் வேலை மகனுக்கு கிடைக்கும் என கூறி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாப்பாத்தி ஓடும் பேருந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்