பிரபல நடிகரின் தாயார் காலமானார்... திரையுலகில் சோகம்!
மறைந்த பழம்பெரும் நடிகர் ராஜேந்திர குமாரின் மனைவி சுக்லா குமார் காலமானார். இந்தி சினிமா உலகம் அவரது மறைவால் சோகத்தில் மூழ்கியுள்ளது. பொதுவெளியில் அதிகம் தோன்றாமல் இருந்தாலும், மரியாதைக்குரிய நபராக அவர் அறியப்பட்டவர்.
சுக்லா குமார், ரமேஷ் மற்றும் ஷியாம் பெஹ்லின் சகோதரி ஆவார். அவருக்கும் ராஜேந்திர குமாருக்கும் ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். அவர்களின் மகன் குமார் கௌரவ் ‘லவ் ஸ்டோரி’, ‘தேரி கசம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த முன்னாள் நடிகர்.
ராஜேந்திர குமார் 1960களில் ‘ஜூபிலி குமார்’ என்ற பெயரில் புகழ்பெற்றவர். 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், ‘மதர் இந்தியா’ படத்தின் மூலம் பெரும் கவனம் பெற்றார். 1999ஆம் ஆண்டு 71 வயதில் அவர் காலமான நிலையில், தற்போது அவரது துணைவியின் மறைவு திரையுலகினரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
