அம்மா உங்களுக்கு என்ன ஆச்சு?... குட்டித் தங்கையை பார்க்க மருத்துவமனை வந்த சிறுவனின் தாய்ப்பாசம்... நெகிழ்ச்சி வீடியோ!

 
சிறுவன்

 

அதிர்ச்சியூட்டும் நெகிழ்ச்சி தரும் ஒரு தருணத்தை ரிச்சா அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது குட்டித் தங்கையைப் பார்க்க ஆசையாக மருத்துவமனை வந்த சிறுவன், பெட்டியில் இருந்து தாயை கண்டதும் உறைந்து போய்விட்டான். கையில் ஊசி மற்றும் குளூக்கோஸ் குழாய்களுடன் தாயை பார்த்த சிறுவன், “அம்மா உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் நைட்சூட் (மருத்துவமனை உடை) போட்டு இருக்கீங்க?” எனக் கேட்டது.

பிறந்த குழந்தையை விட, அக்கறையுடன் தாயைப் பார்த்து “இது நிஜமான பாப்பாவா? இல்லை விளையாடும் பொம்மையா?” எனக் கேட்ட சிறுவனின் மழலைப் பேசும் விதம் அங்கிருந்தவர்களைச் சிரிக்கவைத்தது. தாயின் நிம்மதியற்ற உடலைப் பார்த்து, அந்தத் தருணத்தில் சிறுவன் அன்போடும் ஆச்சரியத்தோடும் தாயைத் தொட்டுக் கொண்டது.

ரிச்சா அகர்வால் தன் பதிவு மூலம், “ஒரு தாயின் வலி எப்போதும் வெளிப்படாது; ஆனால் அந்த வலியையும் தாண்டி, ஒரு குழந்தைக்குத் தாயாக இருப்பதில் பெருமை இருக்கிறது” எனக் கூறியுள்ளார். சிறுவனின் அக்கறை மனத்தைப் பாராட்டி நெட்டிசன்கள், எதிர்காலத்தில் அவன் நல்ல மகனாகவும், அன்பான அண்ணனாகவும் இருப்பார் என வாழ்த்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!