அடுத்த அதிர்ச்சி.. உடனே கோழிகளுக்கு தடுப்பூசி போடுங்க... தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களில் இலவச முகாம்கள்!

 
கோழி

தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரையில் கோழிப்பண்ணை சார்ந்த தொழிலே கிராமப்‌ பொருளாதாரத்தில்‌ முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கோடைக்‌ காலங்களில்‌ கோழிகளுக்கு வெள்ளைக்‌ கழிச்சல்‌ நோய்‌ ஏற்பட்டு இறப்பு ஏற்படுகின்றது. இதனால் பெரியளவில் நஷ்டம் ஏற்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, கோழிகளுக்கு எற்படும்‌ வெள்ளைக்கழிச்சல்‌ நோயினை கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்புத்துறை மூலம்‌ வாரத்திற்கு ஒரு முறை கால்நடை மருந்தகங்களிலும்‌, 15 நாட்களுக்கு ஒரு முறை கால்நடை மருத்துவ கிளை நிலையங்களிலும்‌ முகாம் நடத்தப்பட்டு வெள்ளைக் கழிச்சல்‌ நோய்‌ தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கோழி

எனினும் இந்த நடவடிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று கோழிப் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கோடைக்காலத்தில்‌ வெள்ளைக்கழிச்சல்‌ நோய்‌ ஏற்படுவதை தவிர்க்கும்‌ பொருட்டு முன்னெச்சரிக்கையாக இலவசமாக வெள்ளைக் கழிச்சல்‌ நோய்‌ தடுப்பூசி முகாம்கள்‌ அனைத்து கிராமங்கள் தோறும் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் வரும் 14ம் தேதி முதல் கால்நடை பராமரிப்புத்துறையில்‌ பணிபுரியும்‌ கால்நடை உதவி மருத்துவர்கள்‌ மற்றும்‌ கால்நடை ஆய்வாளர்கள்‌ மூலம்‌ மாலை நேரங்களில்‌ கிராமங்களுக்கு சென்று தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட உள்ளனர்.

கோழி

இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்‌ நோய்‌ ஏற்படுவதை தடுப்பதற்காக தருமபுரி மாவட்டத்திற்கு 1.20 இலட்சம்‌ டோஸ்கள்‌ RDVK தடுப்பூசி மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து விவசாயப்‌ பெருங்குடி மக்களும்‌ மற்றும்‌ கோழிகள்‌ வளர்ப்போர்களும்‌ இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள்‌ கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்‌ நோய்‌ தடுப்பூசிப்‌ போட்டு பயன்பெற வேண்டும், என தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

 

From around the web