"தேமுதிகவின் விரல் அசைவில்தான் அடுத்த ஆட்சி!" - கடலூர் மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் கர்ஜனை!

 
பிரேமலதா

தேமுதிகவின் 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0' கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பாசாரில் நேற்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு தேமுதிக நடத்தும் மிகப்பெரிய மாநாடு இது என்பதால், தமிழக அரசியல் கட்சிகளின் பார்வை கடலூர் மீது படிந்திருந்தது.  "தமிழகத்தில் தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கிறதோ, அந்த அணிதான் ஜார்ஜ் கோட்டையில் அமரும்," எனத் தனது பலத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார்.

பிரேமலதா

"கூட்டணி குறித்து நான் ஏற்கனவே முடிவெடுத்து விட்டேன். ஆனால், அதை இப்போது அறிவிக்க மாட்டேன். மாவட்டச் செயலாளர்களிடம் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், தொண்டர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி அமைக்கப்படும்" என்றார்.

"தேர்தல் வந்தாலே பேரம் பேசுகிறார்கள் என்கிறார்கள். ஆமாம், நான் பேசினேன்; யாரிடம் தெரியுமா? என் கட்சி நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் கட்சி நலனுக்காகப் பேசினேன்" எனப் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தார்.

"கூட்டணி மூலம் மற்ற கட்சிகள் பலனடைகின்றன, ஆனால் வெற்றிக்குப் பிறகு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள மறுக்கிறார்கள். இனி அந்த நிலை இருக்காது," என அதிகாரப் பகிர்வு குறித்த சூசகமான கருத்தையும் தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!