ஊசி போட்ட அடுத்த நொடி துயரம்.... மருத்துவமனையில் 8 மாதக் குழந்தை உயிரிழப்பு!

 
குழந்தை

பிறந்தது முதல் இதயக் கோளாறால் அவதிப்பட்டு வந்த 8 மாதக் குழந்தை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மருத்துவர்களின் அஜாக்கிரதையே இதற்குக் காரணம் எனப் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

பள்ளிப்பட்டு தாலுக்கா அத்திமாஞ்சேரிபேட்டையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வெங்கடேஷ் - கீர்த்தனா தம்பதியினரின் மகன் அஷ்வந்த் (8 மாதம்). இக்குழந்தைக்கு இதயத்தில் பாதிப்பு இருந்ததால், கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். தொடர் சிகிச்சையில் இருந்த குழந்தைக்கு, நேற்று காலை செவிலியர்கள் ஊசி செலுத்தியுள்ளனர். ஊசி செலுத்திய அடுத்த சில நிமிடங்களிலேயே குழந்தை துடிதுடித்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

குழந்தை

குழந்தையின் மரணம் குறித்து மருத்துவர்களோ, செவிலியர்களோ முறையான விளக்கம் அளிக்காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவக் கல்லூரி முதல்வர் (Dean) மோகன் காந்தியின் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குழந்தையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக முன்கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை? சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் மற்றும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

கு

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசிய முதல்வர் மோகன் காந்தி, "குழந்தையின் இதயத்தில் ஓட்டை இருந்தது. மேலும், நுரையீரலில் தண்ணீர் சேர்ந்துவிட்டதால் அதனை அகற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது" என்று விளக்கம் அளித்துள்ளார்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!