அடுத்த அதிர்ச்சி... 20-25 வயது... சூட்கேஸுக்குள் இளம்பெண்ணின் உடல் கண்டெடுப்பு!

நாடு முழுவதும் சமீப காலங்களாக இளபெண்களைக் கொலைச் செய்து விட்டு, சூட்கேஸுக்குள் உடலை திணித்து, தூக்கி வீசி செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது.
பெங்களூருவில் அடுத்தடுத்து இப்படி இரண்டு மூன்று கொலைச் சம்பவங்கள் அரங்கேறிய நிலையில் தமிழகத்திலும் சூட்கேஸுக்குள் இளம்பெண்களின் உடலைத் திணித்து தூக்கி வீசிச் சென்ற சம்பவங்கள் நடந்தன. இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் 20 முதல் 25 வயதுடைய இளம்பெண்ணின் சடலம் சூட்கேசுக்குள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மராட்டிய மாநிலம் ராவின் மாவட்டம், துர்ஷெட் கிராமத்தில் சாலையோரத்தில் கேட்பாரற்று ஒரு சூட்கேஸ் கிடந்துள்ளது. அந்த சூட்கேஸிலிருந்து துர்நாற்றம் வீசுவதை அந்த பகுதி கிராம மக்கள் கவனித்து, இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சூட்கேசை திறந்துப் பார்த்தனர்.
அந்த சூட்கேசில் அழுகிய நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் அடைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த செய்தி காட்டுத்தீ போல பரவி, அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. அதன் பின்னர் இளம்பெண்ணின் சடலத்தை போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, விசாரணையைத் தொடங்கினர்.
சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண் உடலை வைத்து அடையாளம் காண முயற்சித்து வருவதாகவும், இறந்த பெண்ணின் வயது 20 முதல் 25 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் எனவும் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சூட்கேசுக்குள் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!