அமெரிக்காவுக்கு அடுத்த அதிர்ச்சி... அணு சக்தியால் இயங்கும் நீர் மூழ்கி கப்பல் வடகொரியாவில் அறிமுகம்!

வடகொரியா தென்கொரியா நாடுகளுக்கிடையேயான நீண்டநாள் மோதலால் கொரிய தீபகற்பத்தில் எப்போதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உலகின் மிகப்பெரிய கடற்படைகளில் ஒன்றான வடகொரியாவில் 70 – 90 டீசல் மூலம் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன.
ஆனால் அவை பெரும்பாலும் டார்பிடோக்கள், கண்ணிவெடிகளை மட்டுமே ஏவும் திறன் கொண்டவை. 2021ம் ஆண்டு வடகொரியாவில் நடந்த மிகப்பெரிய மாநாடு ஒன்றில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், “அமெரிக்காவின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் அறிமுகப்படுத்தப்படும்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை வடகொரியா அறிமுகம் செய்துள்ளது. இது 6,000 டன் முதல் 7,000 டன் வரை எடை கொண்டதாக உள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை தென்கொரியா, அமெரிக்கா நாடுகளை அச்சுறுத்தும் செயல் என தென்கொரியா தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!