சபரிமலையில் அடுத்த அதிர்ச்சி... தங்க கவசம் திருட்டு விவகாரத்தில் ஐயப்பன் கோவில் தந்திரி கைது!

 
சபரிமலை

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயில் துவாரபாலகர் சிலைகளில் பதிக்கப்பட்ட தங்க கவசம் திருடப்பட்ட வழக்கில் அடுத்தடுத்த திருப்பமாக, கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரருவை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு விவகாரத்தில் தந்திரி கண்டரரு ராஜீவரருவிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

சபரிமலை

துவாரபாலகர் சிலைகள் மற்றும் கதவு நிலைகளில் பதித்திருந்த தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் திருடப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. திருட்டு திட்டமிட்டு நடந்ததா, யார் யார் இதில் தொடர்புடையவர்கள் என்பதைக் கண்டறிய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஐயப்பன் சபரிமலை இருமுடி

இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு தங்கத் தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர். தற்போது தந்திரி கைது செய்யப்பட்டுள்ளதால் விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் இன்னும் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!