தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி... உஷார் மக்களே... இனி வீட்டில் ஆடு, மாடு, நாய், பூனை என வளர்த்தால் கட்டணம் வசூலிக்கப்படும்!

தமிழகத்தில் நின்றால் வரி, நடந்தால் வரி என கொடுங்கோல் ஆட்சி முறையை தற்போதைய ஆளுங்கட்சி பிரதிபலிப்பதாக பொதுமக்கள் ஏற்கெனவே சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து வரும் நிலையில், அடுத்த அதிர்ச்சியாக இனி வீடுகளில் ஆடு, மாடு, நாய், பூனை, கிளி என விலங்குகளை வளர்த்தாலும், பறவைகளை வளர்த்தாலும், வளர்க்க கட்டணம் விதிக்கப்படும் என மதுரை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது என்னடா புது தினுசு கட்டணக் கொள்ளையாக இருக்கிறது. அரசே கோழி, ஆடு, கறவை மாடு போன்றவைகளை வாழ்வாதாரத்திற்காக கொடுத்த காலமெல்லாம் போய், இப்போது முழுசாகவே தமிழகத்தை கிராமங்களே இல்லாத கான்கிரீட் சுடுகாடாக மாற்றிடுவாங்க போலேயே என்று சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.
மதுரை மாநகராட்சி மாமன்றத்தின் 36 மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி பொன்.வசந்த் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், மண்டலத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், அதிமுக முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மாமன்ற கூட்டத்தில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் 7 வகையான 201 சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான உரிம கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளன.
உரிம கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் உயர்த்தப்பட்ட உரிம கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க 150 ரூபாயும், மாடு வளர்க்க 500 ரூபாயும், குதிரை வளர்க்க 750 ரூபாயும், ஆடு வளர்க்க 150 ரூபாயும், பன்றி வளர்க்க 500 ரூபாயும், நாய், பூனை வளர்க்க 750 ரூபாயும் உரிம கட்டணங்கள் நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!