தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வு பயத்தில் சென்னை மாணவி தற்கொலை!

 
தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வு பயத்தில் சென்னை மாணவி தற்கொலை!

தமிழகத்தில் நீட் தேர்வு பயம் காரணமாக அடுத்த அதிர்ச்சியைசென்னையைச் சேர்ந்த மாணவி தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை

சென்னையில் தனியார் அகாடமியில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தர்ஷினி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கிளாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் சாஸ்திரி பவன் பகுதியை சேர்ந்த செல்வராஜ் - தேவி தம்பதிக்கு இரண்டு மகள்கள். செல்வராஜ் ஐயன்சேரி பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரின் மூத்த மகள் தேவதர்ஷினி, சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 2021ம் ஆண்டு 12ம் வகுப்பு முடித்துள்ளார். பின்னர் கடந்த 2021ம் ஆண்டு முதல் இரண்டு முறை நீட் தேர்வு எழுதி மாணவிக்கு கட் - ஆப்  மதிப்பெண்கள் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் அகாடமியில் வரும் மே மாதம் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.  இந்நிலையில் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவி நேற்று மாலை தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற கிளாம்பாக்கம் போலீசார், மாணவி தேவதர்ஷினியின் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

பள்ளி மானவி தற்கொலை

வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நீட் தேர்வு அச்சத்தால் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?