திருப்பதியில் அடுத்த அதிர்ச்சி... லட்டு கவுண்டரில் தீ விபத்து!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்த அதிர்ச்சியாக திருமலை பிரசாதம் வழங்கும் லட்டு கவுண்டரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் இயங்கி வரும் லட்டு பிரசாதம் விநியோகம் செய்யும் மையத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது.
திருமலை வளாகத்தில் லட்டு வழங்கும் மையத்தின் 47ம் எண் கவுண்டரில் யுபிஎஸ்சியில் மின் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்தது. திடீரென தீப்பற்றி எரிந்ததைப் பார்த்த பக்தர்கள், லட்டு வாங்க வரிசையில் நின்றவர்கள் என அனைவருமே அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.
உடனடியாக ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, யுபிஎஸ்சியில் பற்றிய தீயை அணைத்ததால் அந்த பகுதியில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!
