அடுத்த அதிர்ச்சி... கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.. பேராசிரியர் கைது!

 
பிரைட் ஜோவட்ஸ்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இயங்கி வரும் தூய சவேரியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் அக்கல்லூரியின் தற்காலிக பேராசிரியர் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் தூய சவேரியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாலை ஷிப்டில் படிக்கும் திருநெல்வேலியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு, அதே கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக பணிபுரிந்த மருதகுளம் பகுதியைச் சேர்ந்த பிரைட் ஜோவட்ஸ் (34) என்பவர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

திருநெல்வேலி

செல்பேசி மூலமாக அடிக்கடி பேசுவது, இரவில் ஆபாச குறுஞ் செய்திகளை அனுப்புவது போன்ற நடவடிக்கைகளில் அப்பேராசிரியர் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோருடன் காவல் துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

`கைது

மாணவிக்கு பாலியல் ரீதியாக பிரைட் ஜோவட்ஸ் தொல்லை கொடுத்தது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து பேராசிரியர் பிரைட் ஜோவட்ஸை போலீசார் கைது செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?