அடுத்த அதிர்ச்சி... திருவள்ளூரில் மாணவி தீக்குளித்து தற்கொலை!

 
தீக்குளித்து தற்கொலை
திருவள்ளூரில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஒருவர் தற்கொலைச் செய்துக் கொண்ட நிலையில், அடுத்த அதிர்ச்சியாக திருவள்ளூரில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தற்கொலை எதற்கும் நிரந்தர தீர்வல்ல என்பதனை பள்ளி, கல்லூரிகளிலும், வீடுகளிலும் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவ, மாணவிகளிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தீக்குளித்து தற்கொலை

தமிழகத்தில் நேற்று காலை 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வுக்காக, திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளி மாணவியான ஜெயா நகரைச் சேர்ந்த மாணவி ஒருவர் தயாராகி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், அந்த மாணவி நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை தேர்வுக்காக படித்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று காலை தேர்வு நாளின் அதிகாலை தன் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்ற மாணவி, தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

மாணவியின் அலறல் சப்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக மாணவியை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுச் சென்றனர்.அங்கு, மாணவிக்கு 80 சதவீதம் தீக்காயங்கள் இருந்ததால், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

தீக்குளித்து தற்கொலை

இது குறித்து தகவல் அறிந்து வழக்குப்பதிவு செய்த திருவள்ளூர் டவுன் போலீசார், முதற்கட்ட விசாரணையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. 

எனவே மாணவி தற்கொலைக்கு காரணம் தேர்வு பயம் கிடையாது என்பதும், தற்கொலைக்கு என்ன காரணம் என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web