அடுத்த அதிர்ச்சி... நடுரோட்டில் இளம்பெண் மீது தீ வைத்த கொடூரம்... கதறித் துடித்து உடல் கருகி பலியான சோகம்!

கேரள மாநிலத்தில் காசர்கோடு மாவட்டம் பீதாடுக்கா கிராமத்தில் வசித்து வருபவர் ரமிதா. 32 வயதாகும் இவர் அங்கு மளிகை கடை நடத்தி வந்துள்ளார். அதற்கு எதிர்புறம் ஃபர்னிச்சர் கடை நடத்தி வந்த ராமாமிருதம் என்பவர், குடிபோதையில் ரமிதாவுக்கு அடிக்கடி தொல்லை அளித்து வந்ததாக தெரிகிறது.
இது குறித்து ரமிதா கட்டிட உரிமையாளரிடம் புகார் அளித்திருந்தார். இதனால், ராமாமிருதத்திடம் கடையை காலி செய்ய உரிமையாளர் கூறி விட்டார். தன்னுடைய இந்த சூழ்நிலைக்கு காரணம் ரமிதா என நினைத்து விட்டார். இதனையடுத்து ராமாமிருதம், ரமிதாவை பழிவாங்க நினைத்தார்.
ஏப்ரல் 8 ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரமிதா தனது கடையில் இருந்தபோது, ராமாமிருதம் திடீரென அவர் மீது தின்னர் எனப்படும் எளிதில் எரியும் திரவத்தை ஊற்றி, தீயை கொளுத்தி ரமிதா மீது போட்டுள்ளார். இதனால் அலறித்துடித்து படுகாயமடைந்த ரமிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் 50%க்கும் அதிகமாக காயங்களால் ரமிதா உயிரிழந்தார்.
அத்துடன் அப்பகுதி மக்கள் ராமாமிருதத்தை விரைந்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் ராமாமிருதம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!