உற்பத்தியை நிறுத்திய ஹோண்டா!! செய்வதறியாது தவிக்கும் ஊழியர்கள்!!

 
பாகிஸ்தான்

அரசியல் மற்றும் பொருளதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது பாகிஸ்தான். விரைவில் பாகிஸ்தான் இன்னொரு இலங்கையாக மாறும் என நிபுணர்கள் பலரும் கூறி வருகின்றனர். பாகிஸ்தானில் மக்களின் அன்றாட தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது அரசு. அங்கு நிலவும் பொருளாதார நெருக்கடியால் உணவு பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

மிகவும் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலையையும் பாகிஸ்தான் உயர்த்திவிட்டது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.பாகிஸ்தான் திவால் ஆகவிடாமல் இருக்க சீனா மற்றும் சர்வதேச நிதியம் ஆகியவை உதவி செய்தாலும் அந்நாட்டின் மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய பாகிஸ்தான அரசால் முடியவில்லை. 

பாகிஸ்தான்

கடுமையான பொருளாதார நெருக்கடியால சிகேடி எனப்படும் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதிலும், இரும்பு, எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றின் இறக்குமதிகளிலும் சில கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது பாகிஸ்தான் அரசாங்கம். மேலும் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனைகளில் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கைகள் பாகிஸ்தானில் பல்வேறு வெளிநாட்டு தனியார் நிறுவனங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதித்துள்ளது. அந்த வகையில் பாகிஸ்தானில் இயங்கி வரும் ஹோண்டா நிறுவனம் திடீரென தனது ஆலையை தற்காலிகமாக மூட இருப்பதாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக ஹோண்டா நிறுவனம் கார் அசெம்பளி ஆலையை நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி காரணமாக உற்பத்தி செலவு அதிகரித்து வருவதாகவும் இதனை அடுத்து மார்ச் 9 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தற்காலிகமாக பாகிஸ்தானில் உள்ள ஹோண்டா அட்லஸ் கார் நிறுவனம் மூடப்படும் என்று ஹோண்டா நிறுவனம் அந்நாட்டு ஸ்டாக் எக்சேஞ்ச் நிறுவனத்திற்கு ஹோண்டா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.

பாகிஸ்தான்

பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை இதே போன்று நீடித்தால் நிரந்தரமாக மூடவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுசுகி மோட்டார் கம்பெனி மற்றும் டொயோட்டாவின் மோட்டார் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் தங்கள் ஆலையை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தது.இந்த நிலையில் தற்போது ஹோண்டா நிறுவனமும் மூடவுள்ளதாக தெரிவித்ததையடுத்து உற்பத்தி குறைவு மட்டும் இன்றி அந்நாட்டின் வேலை வாய்ப்பின்மையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web