அடுத்த வெற்றி... உலகளவில் தலை நிமிரும் இந்தியா... வெளியானது அசத்தலான அறிவிப்பு!

 
செமி கண்டக்டர் சிப் கணினி

உலக அளவில், இந்தியா மொபைல் போன்கள் தயாரிப்பு, கார் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணி நாடுகளில் ஒன்றாக உள்ளது. எனினும், செல்போன் உற்பத்தி, கார் தயாரிப்பு உட்பட அனைத்திலும் பயன்படுத்தப்படும் செமிகண்டக்டர் தேவைகளை, இந்தியா  பெரும் அளவில் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது.

இறக்குமதி செய்யப்பட்ட செமிகண்டக்டர்கள் உதவியுடன் எல்இடி டிவிக்கள் தயாரிப்பு, செல்போன் தயாரிப்பில் இந்தியா சாதித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், பிஎல்ஐ திட்டத்தின் கீழ், சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது.

செமி கண்டக்டர் சிப் கணினி வேதாந்தா

"இந்தியாவின் செமிகண்டக்டர் தொழிற்சாலை மற்றும் உற்பத்தி தொடர்பான அறிவிப்புகள் அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்படும்" என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவா கூறினார்.

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட செல்போன்களில் 99 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்டவை. ஆனால், இப்போது இங்கு பயன்படுத்தப்படும். செல்போன்களில் 99 சதவீதம் உள் நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் ஒட்டு மொத்த தொழில் சூழலும் மாறுபட்டுள்ளது. செல்போன் உற்பத்தியில் உலக அளவில் 2வது 3வது இடத்திலும் நாம் உள்ளோம். இந்த ஆண்டில் நாட்டின் செல்போன் ஏற்றுமதி 82 ஆயிரத்து 500 கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

செமி கண்டக்டர் சிப் கணினி

இது தொடர்பாக சிஐஐ கருத்தரங்குகளில் அவர் பேசிய பொழுது, இன்னும் ஒரு சில வாரங்களில் செமி கண்டக்டர் மற்றும் சிப் ஆகியவற்றின் பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இதனால், இவற்றை உள் நாட்டில் தயாரிக்க மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இந்நிலையில், நாட்டின் முதல் செமிகண்டக்டர் தொழிற்சாலை மற்றும் அதன் உற்பத்தி தொடர்பான உற்பத்தி சில வாரங்களில் அறிவிப்பு வெளியிடப்படும். என்றார். செமிகண்டக்டர் தயாரிக்க முதன்மையான பொருளாக லித்தியம் தேவைப்படுகிறது, தற்பொழுது இந்தியாவில் லித்தியம் காஷ்மீரில் இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது இது நமக்கு கூடுதல் பலம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web