சபரிமலையில் பக்தர்களின் வருகை 15 லட்சத்தைக் கடந்தது.. டிச.27 மண்டல பூஜை!

 
சபரிமலை

கேரளம் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில், இந்த ஆண்டு நடைபெறும் மண்டல-மகரவிளக்கு புனித யாத்திரைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்துள்ளது என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலையாள மாதமான விருச்சிகம் (கார்த்திகை) முதல் நாளான நவம்பர் 17-ஆம் தேதி மண்டல பூஜை காலம் தொடங்கியது. சந்நிதானம் மற்றும் யாத்திரை பாதைகளில் பக்தர்களின் கூட்டம் முதல் நாளில் இருந்தே அலைமோதியது. டிசம்பர் 3-ஆம் தேதி மாலை 7 மணி நிலவரப்படி, மொத்தம் 14,95,774 பக்தர்கள் கோயிலை அடைந்திருந்தனர். இரவு நேர வருகை கணக்கிடப்பட்டதன் மூலம், மொத்த எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டிவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சபரிமலை கூட்டம்

கடந்த சில நாள்களாக பக்தர்கள் கூட்டம் முற்றிலும் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி ஐயப்பனை வழிபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இணையவழி முன்பதிவு செய்த பக்தர்களில் சுமார் 15 சதவீதம் பேர் வரவில்லை என்றும், நேரடிப் பதிவுக்கான வரம்பு தொடர்ந்து 5,000 ஆக உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சபரிமலை

41 நாள்கள் நடைபெறும் மண்டல பூஜை யாத்திரையின் முக்கிய நிகழ்வுகள் விரைவில் நடைபெறவுள்ளன: டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ளது. அப்போது ஐயப்பனுக்குத் தங்க அங்கி சாத்தப்பட்டு, சிறப்புத் தீபாராதனை நடைபெறும். அன்றிரவு நடை அடைக்கப்பட்டு, மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி மீண்டும் திறக்கப்படும். யாத்திரையின் உச்ச நிகழ்வான மகரஜோதி தரிசனம் ஜனவரி 14ம் தேதி நடைபெறவுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!