பழையன கழிதலும் புதியன புகுத்தலும்... இன்று போகி திருநாள்... இதையெல்லாம் மறந்தும் செஞ்சுடாதீங்க!

இன்று போகி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே சமயம் இந்தியாவில் சுத்தமான நகரங்கள் குறித்த கணக்கெடுப்பில் முதல் 100 நகரங்களில் ஒரு நகரம் கூட தமிழகத்தைச் சேர்ந்த நகரங்கள் தேர்வாகவில்லை என்பதும் சோக செய்தியாக உள்ளது.
பழையன கழிதலும், புதியன புகுதலும் எனும் பழமொழியை போகி திருநாளுக்கு மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கும் கொண்டு வாங்க. மனசில் உள்ள பழைய வன்மத்தைக் கழித்து விட்டு, புதிய மனிதராய் மனதளவில் பிறப்பெடுப்போம். இந்த நாளிலே பொதுமக்கள் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். மனதில் இருக்கும் தீய எண்ணங்கள், பழைய மூடநம்பிக்கைகளை தீயிட்டு கொளுத்தி புதுவாழ்வில் புக வேண்டும் என்பது தான் இதன் தாத்பர்யம். ஆனால் இதை கண்டு கொள்வதே இல்லை.
நாளை ஜனவரி 14ம் தேதி தை மகள் பிறக்கிறாள். தைப் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இன்று கொண்டாடப்படும் போகி திருநாளை புகையில்லா போகி பண்டிகை கொண்டாட பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
போகிப் பண்டிகைக்கு பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது பழமொழி. இதற்கு மனதில் அடைத்து வைத்திருக்கும் பொறாமை, ஆத்திரம், கோபம் போன்ற எதிர்மறையான பழைய எண்ணங்களை அழித்து புதிய எண்ணங்களை மனதில் புகுத்தி புத்துணர்ச்சி பெற வேண்டும் என்பதே நோக்கம். இதுவே நமது பாரம்பரியம். ஆனால் இந்நாட்களில் வீட்டில் அடைத்து வைத்திருக்கும் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர், டியூப் ஆகியவற்றை எரிக்கத் தொடங்கி விடுகின்றனர். இதனால் சுற்றுப்புறம் முற்றிலும் மாசடைந்து விடுகிறது.
இவைகளால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும்.இதனால் அத்தகைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவதை தவிர்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்றின் தரத்தை கண்காணிக்கவும், காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அத்துடன் புகையில்லா போகியை கொண்டாடி வளமோடு வாழ பொங்கல் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!