டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து... ஒருவர் பலி; 15 பேர் படுகாயம்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கோர விபத்து நிகழ்ந்துள்ளது. கேணிப்பட்டுப் பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து நடந்தது. சென்னை நோக்கி ஒரு தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தின் டயர் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறியது.

அந்தப் பேருந்து முன்னால் சென்ற ஒரு இருசக்கர வாகனம் மீது மோதியது. மோதிய வேகத்தில் பேருந்து நிலைதடுமாறியது. இறுதியில் சாலையோரம் இருந்த ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்தச் சோகமான விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது பெயர் கமலக்கண்ணன் எனத் தெரியவந்துள்ளது.

மேலும், பேருந்தில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதே நேரம் அந்த வழியாக வந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் விபத்தைக் கண்டார். அவர் உடனடியாக ஆம்புலன்ஸ்களை வரவழைக்க உத்தரவிட்டார். காயமடைந்தோர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
