ரசிகர்கள் உற்சாகம்... சென்னையில் அக்டோபர் 27ம் தேதி மீண்டும் ஓபன் டென்னிஸ் தொடர்!

 
டென்னிஸ்

 WTA 250   ஓபன் டென்னிஸ் போட்டியை சென்னையில் நடத்த உள்ளதாக உலக டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி 2025 அக்டோபர்   27 ம் தேதி WTA 250 மகளிர் டென்னிஸ் தொடர் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் ஸ்டேடியத்தில் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

டென்னிஸ்

2022 ம் ஆண்டு சென்னையில் WTA 250 டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் WTA 250 டென்னிஸ் தொடர் போட்டிகள் நடைபெற உள்ளதால் டென்னிஸ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.  இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்க உள்ள நிலையில் மொத்தம் 32 ஒற்றையர் பிரிவு ஆட்டங்களும் 16 இரட்டையர் பிரிவு ஆட்டடங்களும் நடைபெற உள்ளன.

டென்னிஸ்
 
இதுகுறித்து தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ்  சென்னையில் மீண்டும் பெரிய  அளவிலான சர்வதேச டென்னிஸ் போட்டியை கொண்டு வருவதற்கான முயற்சிகள் பலன் அளித்துள்ளன. இதற்காக முழு ஆதரவு அளித்த தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு நன்றிகள். சென்னையில் சர்வதேச வீரர்கள் விளையாட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்கள் உடன் நாங்களும் இந்த டென்னிஸ் தொடரை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளதாக கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது