தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு... அரசு பள்ளி விழக்களில் இதற்கு கட்சி துண்டு , ஜாதி அடையாளங்களுக்கு மூச்... !

தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் பள்ளிகளில் நடைபெறும் ஆண்டு விழாக்காளில் சாதி ரீதியிலான பாடல்களை பயன்படுத்தக் கூடாது. சில நாட்களுக்கு முன் அரசு பள்ளி ஒன்றில் நடைபெற்ற விழாவில் மாணவர் ஒருவர் பாமக கட்சியின் துண்டுடன் நடனம் ஆடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
அதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் 5 மாணவர்கள் திரைப்பட பாடலுக்கு நடனமாடியுள்ளனர். அதன் பிறகு ஒரு மாணவர் வீரப்பன் படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்டை கையில் வைத்து நடனமாடியுள்ளான். 2 மாணவர்கள் கட்சி துண்டை போட்டு நடனமாடியுள்ளனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் இதுபோன்ற திரைப்பட பாடல்கள் மற்றும் ஜாதி ரீதியிலான அடையாளங்களை காண்பிப்பது மிகவும் தவறு. இதனை கட்டாயமாக தவிர்க்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதுபோன்று செயல்களை தவிர்க்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டால் தலைமை ஆசிரியர் உட்பட பள்ளியின் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!