முயற்சியை கைவிட்ட ‘விடாமுயற்சி’... பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கியது!

 
விடாமுயற்சி

‘விடாமுயற்சி’ தலைப்பு வைத்ததில் இருந்து வருடக்கணக்கில் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த வருட பொங்கல் ரிலீஸ் என்று கூறப்பட்டு அதற்கான போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகளும் நடைபெற்று வந்த நிலையில், திடீரென பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கியது ‘விடாமுயற்சி’.

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர்கள் அஜித், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

சமீபத்தில் இந்தப் படத்தில் இருந்து ‘சுவதீகா’ என்ற முதல் சிங்கிளும் வெளியானது. படம் இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாவதாக படக்குழு அறிவித்திருந்தது.

விடாமுயற்சி

ஆனால் தற்போது பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த காத்திருப்புக்கான பலன் இருக்கும். மேலும், இந்த புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு வருடத்தின் ஆரம்பமே பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web