விஜய்யின் வீட்டு வாசலில் செருப்பை தூக்கி வீசிய நபர்… தவெகவில் பரபரப்பு.!

 
விஜய்


 தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது ஆண்டு தொடக்கவிழா இன்று நடைபெறுகிறடு. இதற்காக மாமல்லபுரத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளை விஜய் அறிமுகம் செய்து வைக்கிறார். அத்துடன் பிரசாந்த் கிஷோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்நிலையில்  பனையூரில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

விஜய்

இளைஞர் ஒருவர் திடீரென குழந்தை அணியக்கூடிய செருப்பை விஜய்யின் வீட்டிற்குள் வீசினார். பின்னர், உடனடியாக அங்கிருந்த காவலாளிகள் அந்த நபரை அங்கிருந்து வெளியேற்றினார்கள்.செருப்பை வீசிய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது, மாமல்லபுரத்தில் விஜய் கட்சியின் 2ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு  இன்னும் சற்று நேரத்தில் விஜய் தனது வீட்டில் இருந்து புறப்படவிருக்கும் நிலையில், இவ்வாறான செயல் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

தவெக
மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா நடைபெறுகிறது. இதில்   தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுன் , தேர்தல் வியூக பணியில் கைகோர்த்துள்ள பிரசாந்த் கிஷோரும் இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர்.  காலை 10 மணிக்கு மேல் தொடங்கவிருக்கும் இந்த விழாவில், 2026 சட்டசபை தேர்தல், கூட்டணி, கட்சியை பலப்படுத்த என்ன செய்ய வேண்டும்? என்பது தொடர்பாகவும், தேர்தல் வியூகம், சுற்றுப்பயணம், கூட்டணி குறித்தும்  தவெக தலைவர் விஜய் உரையாற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web