சோகம்... லாட்டரியில் 80 லட்சம் ரூபாய் வென்ற நபர் படுகொலை.. நண்பர்கள் வெறிச்செயல்!

 
சஜீவ்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாங்கோடு பகுதியைச் சேர்ந்த சஜீவ் (35 ) என்பவருக்கு கடந்த மாதம் கேரள அரசு லாட்டரியில் முதல் பரிசான ரூ.80 லட்சம் விழுந்தது. இதனால் அவரும் அவரது குடும்பத்தினரும் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். இதைதொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன், அவரது வங்கி கணக்கில் 80 லட்சம்  ரூபாயில் வரிகள் கழிந்தது போக மீதமுள்ள பரிசுத்தொகை வரவு வைக்கப்பட்டது.

அப்போது சஜீவ்விடம் அவரது நண்பர்கள் பார்ட்டி வைக்க கூறியிருக்கிறார்கள். இதையடுத்து தனது நண்பர்களுக்கு மது விருந்து அளிக்க சஜீவ் முடிவு செய்திருக்கிறார். அதன்படி கடந்த 1ஆம் தேதி இரவில் நண்பர்கள் அனைவரும் பாங்கோடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் பிள்ளை என்பவரது வாடகை வீட்டில் கூடியிருக்கிறார்கள்.

சஜீவ்

அங்கு சஜீவ் வீட்டில் இருந்து தவறி விழுந்ததாகக்கூறப்படும் தலையில் பலத்த காயங்களுடன் கடந்த இரண்டாம் தேதி திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மறுநாளே அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. 

சஜீவ் இந்த பணத்தில் குறிப்பிட்ட தொகையை செலவிட்டு நண்பர்களுக்கு மதுவிருந்து வைப்பதற்கு முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த ஒன்றாம் தேதி இரவு பாங்கோடு சாந்தகுடியில் உள்ள நண்பர் ராஜேந்திரன் என்பவர் வீட்டில் நண்பர்கள் ஒன்று கூடி மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

அப்போது சந்தோஷ் என்ற இளைஞர் சஜீவைப் பிடித்துத் தள்ளியதில் நிலை தடுமாறி வீட்டின் மாடியிலிருந்து அருகிலுள்ள ரப்பர் தோட்டத்தில் விழுந்துள்ளார். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவரை சக நண்பர்கள் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சஜீவ்

அதேசமயம் மது விருந்தின்போது லாட்டரி பணத்தைக் கேட்டு நண்பர்கள் கொலை செய்தார்களா என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சஜீவின் மரணத்தில் உள்ள மர்மத்திற்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லாட்டரியில் 80 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை கிடைத்ததால் சஜீவுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி சில நாட்களிலேயே முடிவுக்கு வந்து விட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web