விமான விபத்து அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது... பிரிட்டன் பிரதமர் பதிவு!

 
விமான விபத்து அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது... பிரிட்டன் பிரதமர் பதிவு!  


 
குஜராத்திலிருந்து லண்டன் கிளம்பிய ஏர் இந்தியா விமான சில நிமிடங்களிலேயே குடியிருப்பு பகுதிகளில் விழுந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விமான விபத்தில் இதுவரை 133 பேர் உடல்கள் இதுவரை கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக பிரட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் பதிவிட்டுள்ளார். 


இந்த விமானத்தில் பயணித்த 53 பிரிட்டன் நாட்டினர் உள்பட 242 பயணிகள் பயணம் செய்ததை ஏர் இந்தியா நிர்வாகம் உறுதி செய்துள்ளது.இந்த விபத்து குறித்து  பிரிட்டன் பிரதமர்,  "பிரிட்டனைச் சேர்ந்த பலருடன் இந்தியாவின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனை நோக்கிப் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான காட்சிகள் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.தற்போதைய நிலை குறித்து எனக்கு தொடர்ந்து தகவல்கள் அளிக்கப்பட்டு வருகிறது.   இந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன" என பதிவிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது