விமான விபத்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயம் உடைந்தது... பிரதமர் மோடி வேதனை!

 
விமான விபத்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயம் உடைந்தது... பிரதமர் மோடி வேதனை!  


 
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம்  ஏஐ171 புறப்பட்ட சில நிமிடங்களில் குடியிருப்பு பகுதிகளின் மேலே விழுந்து  தீப்பற்றி எரிந்தது.விண்ணை முட்டும் அளவுக்கு அந்த பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இந்த கோர விமான விபத்தில்  168 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் என 242 பேர் பயணம் செய்தனர்.  


விமான நிலையத்திற்கு அருகே மேதானி நகர் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்துள்ளதால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டு இருப்பதாக  கூறப்படுகிறது. இதுவரை 133 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விமானம் விபத்து
 
இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பிரதமர் மோடி  வெளியிட்டுள்ள பதிவில் ” அகமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, இந்த விமான விபத்து சம்பவம் என்னை மிகவும் வருத்தப்படுத்தியுள்ளது. நிச்சயமாக வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயத்தை உடைக்கிறது. இந்த சோகமான நேரத்தில், அதனால் பாதிக்கப்பட்டவர்களின் மீது தான் எண்ணங்கள் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகப் பணியாற்றும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தேன். தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்” எனவும் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது