சாலையில் இரும்பு தடுப்புக்களை வைக்காதீங்க... தவெகவினரிடம் கறார் காட்டிய காவல்துறை.. பரபரப்பு!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது ஆண்டு கூட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டாம் ஆண்டு கூட்டம் நடைபெற உள்ள விடுதியின் எதிரே போடப்பட்டுள்ள பேரிகார்டுகளை அகற்றி வரும் போலீசாரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நாளை தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற உள்ள நிலையில் விழா நடைபெற உள்ள நட்சத்திர விடுதியின் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் தமிழக வெற்றி கழகத்தினர் இரும்பு தடுப்புகளை அமைத்து வருகின்றனர். சாலையில் இரும்பு தடுப்புகளை அமைக்க கூடாது இங்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக வெற்றி கழக தொண்டர்களிடம் காவல்துறையினர் கூறி வருகின்றனர்.
காவல்துறையினரும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளும் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நட்சத்திர விடுதியின் எதிரே சர்வீஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளை போலீசார் அகற்றி வருகின்றனர். இதனால் தமிழக வெற்றி கழகத்தின் 2 ம் ஆண்டு தொடக்க விழா கூட்டம் நடைபெற உள்ள நட்சத்திர விடுதி எதிரே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!