காவல் அதிகாரி வீட்டிலேயே கைவரிசை.. தீவிர தேடுதலில் சிக்கிய கொள்ளை கும்பல்!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், சின்னப்பள்ளிக்குப்பம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 7 ஆம் தேதி, மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து, 10 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதேபோல், அதே தேதியில், மர்ம நபர்கள் மிளகாய்ப் பொடியைத் தூவி, 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிக்க திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயாகுப்தா தலைமையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவின் துணை காவல் கண்காணிப்பாளரின் வீட்டில் இருந்து சிசிடிவி காட்சிகளை சிறப்புக் குழு போலீசார் கைப்பற்றி, கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடினர். இந்த நிலையில், சின்னப்பள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சங்கரை சிறப்புக் குழு போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த சாந்தியுடன் சேர்ந்து சங்கர் இரண்டு வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் மற்றும் முத்துக்குமார் ஆகியோரை வரவழைத்தனர். கடந்த 7 ஆம் தேதி, முகமூடி அணிந்திருந்த ஐந்து பேரும், மத்திய குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளரின் வீட்டில் இருந்து 10 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கத்தைக் கொள்ளையடித்தனர். மேலும், கட்டவரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் வீட்டில் இருந்து 5 பவுன் தங்க நகைகள் மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் கொள்ளையடித்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!