தேடிய போலீசார்.. மேம்பாலத்தில் காரை நிறுத்தி ஏரிக்குள் பாய்ந்த இளைஞர்.. சோக முடிவு !!

 
porur

சென்னை வடபழனியைச் சேர்ந்த 27 வயது பெண். இவர் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது நிஷாந்த் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இது நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. இவர்கள் இருவரும் கல்லூரியில் சேர்ந்த பிறகும் அந்த காதல் தொடர்ந்தது.

பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனது காதலியை நிஷாந்த் பலமுறை பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த பெண்ணிடம் இருந்து சிறிது சிறிதாக ரூ 68 லட்சத்தை நிஷாந்த் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

வயது ஆகிக்கொண்டே செல்வதால் அப்பெண் தனது காதலன்  நிஷாந்த் திருமணம் குறித்து அடிக்கடி பேசிவந்துள்ளார். ஆனால் நிஷாந்த் அதற்கு பிடிகொடுக்காமல் காலம் தாழ்த்திவந்துள்ளார். இந்த நிலையில்தான் சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் சிஇஓ மற்றும் தொழிலதிபரின் மகளை நிஷாந்த் திருமணம் செய்ய முடிவு செய்தார்.

நிஷாந்த்

ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதை அறிந்த காதலி, இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் அளித்தார். பின்னர் நிஷாந்துக்கும் பணக்கார பெண்ணுக்கும் நடக்கவிருந்த திருமணத்தையே நிறுத்திவிட்டார். இந்த புபகாரில் போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து நிஷாந்தை தேடி வந்தனர்.

கடந்த 4 நாட்களாக போலீசார்  நிஷாந்தை தேடி வந்த நிலையில் தனது நண்பர்களோடு நேற்று மது அருந்திய நிஷாந்த் பிறகு வேறு ஒரு நண்பரின் காரை எடுத்துக் கொண்டு வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் சிறுதி நேரத்தில் வாட்ஸ் ஆப் மூலம் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு தகவலை அவர் அனுப்பினார்.

அதில் நல்ல நண்பர்கள் நீங்கள், நான் வாழ தகுதியற்றவன், நாளை ஏதாவது ஒரு ஏரியில் எனது சடலம் மிதக்கும் என குறுந்தகவல் அனுப்பிவிட்டு செல்போன் எண்ணை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார். இதையடுத்து இந்த தகவலை அவரது நண்பர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

நிஷாந்த்

பின்னர் நிஷாந்தின் செல்போன் எண் போரூர் ஏரி அருகே ஸ்விட்ச் ஆப் ஆனது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது அவர் ஓட்டி வந்த கார் மட்டும் ஏரி அருகே இருந்ததை கண்டுபிடித்தனர்.

நிஷாந்த் கூறியது போல் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பதை கண்டறிய விருகம்பாக்கம் தீயணைப்புத் துறை வீரர்கள் போரூர் ஏரியில் நிஷாந்த் உடலை நேற்றுமுதல் தேடி வந்தனர். தற்போது நிஷாந்தின் உடல் போரூர் ஏரியில் கரை ஒதுக்கியுள்ளது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் முனைப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web