பரபரக்கும் அரசியல் வட்டாரம்... மே 23ம் தேதி டெல்லி விரையும் முதல்வர் ஸ்டாலின்? நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடிவு?

 
மே 23ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்... டெல்லி விரையும் ஸ்டாலின்!  
பிரதமர் மோடியின் தலைமையில் நிதி ஆயோக் மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த  கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். நிதி ஆயோக் அமைப்பு 2015ம் ஆண்டு, திட்டக்குழுவுக்கு பதிலாக உருவாக்கப்பட்டது  

 ஸ்டாலின் மோடி
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வாரா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.  மே 23ம் தேதி இரவு டெல்லிக்கு புறப்படவிருக்கிறார் என அரசு வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

ஸ்டாலின் மோடி

2024ம் ஆண்டு  நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பதாலேயே, இம்முறை அவர் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தில், தமிழக தேவைகள் குறித்து நேரடியாக பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் பேச வாய்ப்பு இருப்பதால், அரசியல் வட்டாரங்களில் இந்த சந்திப்பு குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது