வைரலாகும் போஸ்டர்... கூட்டத்தில கலந்துக்கிறவங்களுக்கு தங்கநாணயம், மிக்ஸி, கிரைண்டர், பீரோ, ஃபேன் ... அதிமுக அட்ராசிட்டி!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாக்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மார்ச் 5ம் தேதி மாலை 5 மணிக்கு ஊத்துக்குளியில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்ட விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என அதிமுக அதிரடியாக அறிவித்துள்ளது.
அதன்படி கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் 3 பேருக்கு தங்க நாணயம் வழங்கப்படும்.அதன் பிறகு 300 பேருக்கு மிக்ஸி, குக்கர், கிரைண்டர், பீரோ, ஃபேன் மற்றும் சில்வர் பாத்திரங்கள் ஆகியவை குலுக்கல் முறையில் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சிறப்பு பரிசும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக தான் அதிமுக இப்படி ஒரு நோட்டீசை அடித்து ஒட்டியிருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!