வைரலாகும் போஸ்டர்... நான் யானை அல்ல. குதிரை டக்குனு எழுவேன்... செந்தில் பாலாஜி அட்ராசிட்டி !

அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி . அந்த நேரத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்திருப்பதாக அவர் மீது சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவிலிருந்து பிரிந்து திமுகவில் இணைந்தார். அவருக்கு மின்சார துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையினால் கைது செய்யப்பட்டார்.
சிறையில் அவர் ஒரு வருடம் இருந்த பிறகு உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் அவர் ஜாமீனில் வெளியே வந்தவுடன் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது செந்தில் பாலாஜி சாட்சியங்களை கலைக்ககூடும் என்பதால் உடனடியாக அவருக்கு ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில் அதனை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்தது. அதே நேரத்தில் அமைச்சர் பதவி இல்லையெனில் ஜாமீன் இரண்டில் ஒன்றுதான் வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. இதனால் செந்தில் பாலாஜி தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
இந்நிலையில் தற்போது கோவை மாநகரில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில் செந்தில் பாலாஜியின் புகைப்படத்தை படையப்பா ரஜினி போன்று சித்தரித்து ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் நான் யானை அல்ல. குதிரை டக்குனு எழுவேன் என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது. அவருடைய ஆதரவாளர்கள் அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று நோக்கத்தில் இந்த போஸ்டரை ஒட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!