வைரலாகும் போஸ்டர்... அஜீத் சார், எப்ப தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க போறீங்க... ரசிகர்கள் அட்ராசிட்டி!

 
அஜீத்

தமிழ் சினிமாவில் தல நடிகராக கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏப்ரல் 10ம் தேதி இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் நடிகர் அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடைபெறும் கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார்.

மதுரை

நடிகர் அஜித்தின் ரசிகர்கள் எப்போதுமே அவர் அரசியலுக்கு வரவேண்டும் என எதிர்பார்த்துள்ளனர். ஆனால் அவர் ஒருபோதும் அரசியலுக்கு மட்டும் வரமாட்டார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதனை மனதில் வைத்து அவருடைய ரசிகர்கள் அதைப்பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக காத்துக்கிடக்கின்றனர். 

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் தற்போது நடிகர் அஜித்குமார் மற்றும் அண்ணாமலையின் போட்டோவை ஒன்றாக சேர்த்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்திட்டீங்க. இனி தமிழ்நாட்டிற்கு எப்போது பெருமை சேர்க்க போகிறீர்கள் என போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் விஜய் புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் அஜித்தை தங்கள் பக்கம் இழுக்க பாஜக மற்றும் திமுக முயற்சி செய்வதாக ஏற்கனவே ஒரு கருத்து அடிபடும் நிலையில் தற்போது அண்ணாமலை மற்றும் அஜித்குமாரை சேர்த்த போஸ்டர்கள் ஒட்டியது பரபரப்பாக பேசப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web