அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை... மாதத்தின் துவக்கத்திலேயே குட் நியூஸ்!
மாதத்தின் துவக்கத்திலேயே நல்ல செய்தியாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலைகுறைக்கப்பட்டிருக்கிறது வணிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் கேஸ் சிலிண்டர் விலை இன்று (டிசம்பர் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான (19 கிலோ எடை கொண்ட) சிலிண்டர் விலை ரூ. 10.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ. 1,750-க்கு விற்பனையாகி வந்த வணிகப் பயன்பாட்டுக் கேஸ் சிலிண்டர், இன்று முதல் ரூ. 1,739 ரூபாய் 50 காசுக்கு விற்பனையாகிறது. விலை குறைக்கப்பட்டிருப்பதால், உணவகங்கள் மற்றும் கடைகளில் சிலிண்டரைப் பயன்படுத்தும் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையைப் போலவே, மற்ற மெட்ரோ நகரங்களான டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களிலும் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, குளிர்காலத்தில் எல்.பி.ஜி. விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், தற்போது விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது வணிகங்களுக்குச் சிறிது தற்காலிக நிவாரணத்தை வழங்கியுள்ளது.

அதே சமயம் வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் வீட்டு உபயோகச் சிலிண்டர் விலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் எவ்வித மாற்றமும் இன்றி, ரூ. 868 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், சமானிய மக்கள் பயன்படுத்தும் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாததால், அவர்களின் பட்ஜெட்டில் எந்தப் பாதிப்பும் இல்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
