தங்கம் விலை குறைய தொடங்கியது... இன்று சவரன் ரூ.96 ஆயிரத்து 320-க்கு விற்பனை!
தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் போக்கு காட்டி வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக மீண்டும் உச்சத்தை நோக்கிப் பயணித்து வந்தது. இந்நிலையில், இன்று (டிசம்பர் 2, 2025) தங்கம் விலை சற்று இறக்கம் கண்டுள்ளது.

நேற்று (டிசம்பர் 1) தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்து விற்பனையானது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.12,070-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.96,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து, இன்று ஒரு சவரன் ரூ. 96,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ. 196-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1 லட்சத்து 96 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை மீண்டும் ஏற்றத்தை நோக்கிச் சென்று வந்த நிலையில், இன்று சற்று இறக்கம் கண்டிருப்பது முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
