புதிய உச்சம்... தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு! அதிர்ச்சியில் நகைப் ப்ரியர்கள்!

 
தங்கம்

கடந்த சில நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை தினசரி புதுப்புது உச்சம் தொட்டு  வருகிறது. அந்த வகையில் இன்று வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,560க்கும்,  சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.44,480க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 9 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,420 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை அதிகரித்த அதே நேரத்தில்  வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.1.30 காசுகள் உயர்ந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி   ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.40 க்கும்,  ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1300 அதிகரித்து ரூ.74,400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம்

அமெரிக்காவின் மத்திய வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்க திட்டமிடுகின்றன. இதன் காரணமாக தங்கத்தில் முதலீடுகள் குறையலாம். அதோடு இந்தியாவிலும் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவும் தேவையினை குறைக்கலாம். ஆக இதுவும் அழுத்தத்தினை கொடுத்துள்ளது. இதற்கிடையில் தான் தங்கம் இடிஎஃப்களில் இருந்தும் முதலீடுகள் வெளியேற ஆரம்பித்துள்ளன. இதற்கிடையில் அமெரிக்க வங்கியானது வட்டி விகிதத்தினையும் அதிகரித்துள்ள நிலையில், இது டாலரின் மதிப்பு ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. இதனால் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலிக்கிறது.

சர்வதேச அளவில்  கரன்சிக்கு அடுத்தபடியாக தங்கம் தான் சொத்து மதிப்பாக கணக்கிடப்படுகிறது. பணக்காரர்கள் முதல் பாமரர் வரை தங்கத்தில் முதலீடு செய்வதன் முக்கிய காரணம் அதனை உடனடியாக பணமாக மாற்ற முடியும் என்பது தான். இதுதவிர சர்வதேச பொருளாதார சூழலில் பதற்ற நிலை ஏற்பட்டால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதுவதும் தங்கம் தான் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். 

தங்கத்தின் விலை கூடினாலும், குறைந்தாலும் அதற்கான மவுசு குறைவதே இல்லை. இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் மீதான முதலீடு தான் பெரும் சேமிப்பாக பார்க்கப்படுகிறது. விற்பனையிலும் முண்ணனியில் இருந்து வருவதாக  பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு தங்கத்தின்விலை வரலாறு காணாத உச்சம் தொட்டது. இதனால் முதலீட்டாளர்கள் , நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தங்கம் நகைக்கடை

 

நடுத்தர வர்க்கத்தினர் இல்லத்தரசிகள் இனி தங்கம் வாங்கவே முடியாதோ என கலக்கத்தில் ஆழ்ந்தனர். இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் மீதான முதலீடு ஒரு பெரும் சேமிப்பாகவே இருந்து வருகிறது. உலக அளவில் இந்தியாவில் தான் தங்கம் விற்பனையில் முண்ணணியில் உள்ளது. தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும் அதற்கான மவுசு குறையவே இல்லை. ஏறும் போது திடீரென இரட்டை இலக்கத்தில் உயரும் தங்கம் இறங்கும் போது ஒற்றை படை இலக்கத்தில் இறங்கி வந்தது. அதன் பிறகு இந்த வாரத் தொடக்கம் முதலே தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது.

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web