ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை! கிராம் ரூ5,600க்கு விற்பனை! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

 
மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!!

ஆபரண தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் அதிரடியாக கிராமுக்கு ரூ.5,600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இனி, நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது குறித்து சிந்திக்கவே முடியாதபடி கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை உயரும் போது ராக்கெட் வேகத்திலும் குறையும் போது கிராமுக்கு ஒற்றைப் படை எண்களிலும் குறைந்து வருகிறது. இன்று தங்கம் கிராமுக்கு ரூ65 அதிகரித்து புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்றைய விலைநிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின்வ் விலை ரூ 5600க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.44,800க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி  சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 77.80க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ77800க்கும்  விற்பனை செய்யப்பட்டு அருகிறது. தங்கத்தின் விலை புதிய உச்சம் தொட்டுள்ளதால்  நகைப்பிரியர்கள்  அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தங்கம்

தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும் அதற்கான  மவுசே தனி தான். இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது மிகப்பெரிய சேமிப்பாக இருந்து வருகிறது. ஏறும் போது இரட்டை இலக்கத்தில் ஏறி இறங்கும் போது ஒற்றைப்படை இலக்கத்தில் இறங்கி முதலீட்டாளர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழகம் முண்ணனியில் இருந்து வருகிறது. அதிலும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  அதிலும் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.

தங்கம்
நிதி நெருக்கடியின் போது தங்கத்தை விற்று பணமாக்கி கொள்ளவும் முடியும். தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க லாபம் கிடைத்து வருகிறது. இது தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாற்றி வைத்துக் கொள்வதும் உண்டு.  அதனால் தான் குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.77.70க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ77700க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web